முதுமலை பகுதியில் ரூ.1.85 கோடியில் புதிய பாலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை பகுதியில் ரூ.1.85 கோடியில் புதிய பாலம்

Added : ஆக 25, 2021
Share
கூடலுார் : முதுமலை தெப்பக்காடு பகுதியில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நுாற்றாண்டு பாலம் இடிக்கப்பட்டு, 1.85 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு - மசினகுடி சாலையில், மாயார் ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. பாலம் சேதமடைந்து பலமிழந்து வந்தது. பாலத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறையினர், 'பாலத்தில் ஆறு டன்

கூடலுார் : முதுமலை தெப்பக்காடு பகுதியில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நுாற்றாண்டு பாலம் இடிக்கப்பட்டு, 1.85 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு - மசினகுடி சாலையில், மாயார் ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. பாலம் சேதமடைந்து பலமிழந்து வந்தது. பாலத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறையினர், 'பாலத்தில் ஆறு டன் எடைக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை,' என, அறிவிப்பு பலகை வைத்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த சாலை உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம், 1.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, வனத்துறை அனுமதி கோரி விண்ணப்பித்தனர். வனத்துறை அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, விரைவில் பணிகளை துவங்க உள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில்,'இந்த பணி துவங்கிய உடன், வனத்துறைக்கு சொந்தமான சாலை வழியாக, மசினகுடிக்கு வாகனங்கள் இயக்கப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X