அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் அரிசி மானியம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை :''ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், தி.மு.க., தான் மத்திய அரசின் மானியம் கிடைக்காததற்கு காரணம் என்று கூறுவது, எதிர்க்கட்சி தலைவருக்கு, எந்த வகையில் நியாயமாக தெரிகிறது,'' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.அவர் பேசியதாவது:உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடக்கும் நிலையில், இங்கு வந்து பேசாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அறிக்கை

சென்னை :''ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், தி.மு.க., தான் மத்திய அரசின் மானியம் கிடைக்காததற்கு காரணம் என்று கூறுவது, எதிர்க்கட்சி தலைவருக்கு, எந்த வகையில் நியாயமாக தெரிகிறது,'' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது:உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடக்கும் நிலையில், இங்கு வந்து பேசாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அறிக்கை வெளியிட்டார். 2018 முதல், 2021 வரை, மத்திய அரசிடம், 3,681 கோடி ரூபாய் மானிய தொகையை பெறாமல் இருந்து விட்டு, இன்றைக்கு நாங்கள், 2,000 கோடி ரூபாய் பெறவில்லை என்று, அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த, 2018 - 19 முதல் மூன்று ஆண்டுகளில், மத்திய அரசிடம், 10 ஆயிரத்து, 913 கோடி ரூபாய் மானியமாக கேட்கப்பட்டுள்ளது. அதில், 7,232 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. மீதம், 3,681 கோடி ரூபாய் பெறாமல் நிலுவையில் உள்ளது. நேரடி கொள்முதல் மையங்களில், கொள்முதல் செய்யும் நெல் அரிசியாக்கப்பட்டு, ரேஷனில் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அரிசிக்கு, மத்திய அரசிடம் மானியம் பெறப்படுகிறது. இணையதளத்தில், மூன்று ஆண்டுகளாக புள்ளி விபரங்களில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாகவே, மத்திய அரசின் மானியம் கிடைக்கவில்லை.

தற்போது, 2020 - 21ம் ஆண்டுக்கான மானியத்தில் நிறுத்தம் செய்த, 2,946 கோடி ரூபாயை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அதிகாரிகள் நேரில் சென்று கேட்டதால், 2021 - 22ம் ஆண்டுக்கான, 2,246 கோடி அரிசி மானியத்தை வழங்கவும், மத்திய அரசு பரீசிலித்து வருகிறது. ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில், தி.மு.க., தான் மானியம் கிடைக்காததற்கு காரணம் என்று கூறுவது, எதிர்க்கட்சி தலைவருக்கு, எந்த வகையில் நியாயமாக தெரிகிறது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X