கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலுக்கு தடை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை:அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாதம் 6ம் தேதி வெளியானது. 'ஆக., 8ல் துவங்கி, ஐந்து கட்டங்களாக நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. தற்போது, இரண்டு கட்ட தேர்தல் முடிந்து, மூன்றாவது கட்ட தேர்தல்

சென்னை:அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிப்பு, இம்மாதம் 6ம் தேதி வெளியானது. 'ஆக., 8ல் துவங்கி, ஐந்து கட்டங்களாக நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது. தற்போது, இரண்டு கட்ட தேர்தல் முடிந்து, மூன்றாவது கட்ட தேர்தல் துவங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினரான முனுசாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கொரோனா பரவல் முற்றிலும் முடிந்து, சகஜ நிலை திரும்பும் வரை அல்லது குறைந்தது மூன்று மாதங்களாவது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.'வழக்கு விசாரணை முடியும் வரை, நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகி, 'ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிந்து விட்டது;'சங்க விதிகளின்படி, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அதனால், தடை விதிக்கக் கூடாது' என்றனர்.இதையடுத்து, தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X