சிறந்த நுால்களுக்கு அரசின் பரிசு பெறலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த நுால்களுக்கு அரசின் பரிசு பெறலாம்

Added : ஆக 25, 2021
Share
சென்னை:சிறந்த நுால்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற, இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் சிறந்த நுால்களுக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், அகராதி உள்ளிட்ட 33 தலைப்புகளில் வெளியிடப் பட்டு உள்ள நுால்களை அனுப்பலாம்.

சென்னை:சிறந்த நுால்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற, இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் சிறந்த நுால்களுக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, நுண்கலைகள், அகராதி உள்ளிட்ட 33 தலைப்புகளில் வெளியிடப் பட்டு உள்ள நுால்களை அனுப்பலாம். போட்டிக்கு, ஒவ்வொரு நுாலிலும் 10 பிரதிகளை, நுாலாசிரியர், பதிப்பகத்தார் ஒப்புதலுடன், 100 ரூபாய் பதிவுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் நுால்களின் கருத்துகள் வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் வெளிவந்திருக்க கூடாது.போட்டியில் உள்நாடு, வெளிநாடு வாழ் எழுத்தாளர்கள் பங்கேற்கலாம். உள்ளூர் எழுத்தாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.போட்டிக்கான நுால்களை, வரும் 31ம் தேதிக்குள், 'இயக்குனர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர் - 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X