அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரேஷன் கடை காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை:''ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுனர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* கூட்டுறவு துறை வாயிலாக, பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் உள்ள

சென்னை:''ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, புதிதாக 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுனர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கூட்டுறவு துறை வாயிலாக, பட்டுக்கோட்டை மற்றும் பர்கூரில் உள்ள அரசின் தொழிற் பயிற்சி கல்லுாரிகளில் படிக்கும் 312 மாணவர்களின் கல்வி கட்டணம் 22 லட்சம் ரூபாயை அரசே ஏற்கும்

* திண்டுக்கல் மாவட்டம், மன்னவனுாரில் 85 கோடி ரூபாய் மதிப்பில், தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்

* ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் 3,331 விற்பனையாளர்கள், 666 கட்டுனர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்படும்

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி, 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும். கடன் அளவு 10 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

* விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, 5 சதவீத வட்டியில் கூட்டு றவு கடன்கள் வழங்கப்படும். இதன்வாயிலாக 7.40 லட்சம் பேர் பயன் பெறுவர்

* கே.சி.சி., திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாய கடன் போல, இனி கால்நடை வளர்ப்புக்கும் கடன்கள் விரிவுபடுத்தப்படும்

* வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும்

* கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்பான, மங்களம் மஞ்சள் துாள் மற்றும் பென்னாகரம் புளி, அதிகளவில் சந்தைப்படுத்தப்படும்.

* தற்போதுள்ள 303 கூட்டுறவு மருந்தகங்கள், ஆண்டுக்கு 60 வீதம், ஐந்து ஆண்டுகளில் 600 ஆக உயர்த்தப்படும் கூட்டுறவு துறை வங்கிகளில் 1.98 கோடி ரூபாய் செலவில் புதிதாக, 96 ஏ.டி.எம்., இயந்திரங்கள் பொருத்தப்படும்

* திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் 2,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்

* மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, மதுரை - தேவாரம், கூடல்நகர்; புதுக்கோட்டை-டி.வி.எஸ்., நகர், தேனிப்பட்டி; தஞ்சாவூர் - சோழபுரம்; நாகப்பட்டினம் - ஆயக்காரன்புரம். திருவாரூர் - கச்சனம், துாத்துக்குடி - வாகைகுளம்; வேலுார் - குரிசிலாப்பட்டு, புதுப்பேட்டை ஆகிய இடங்களில், 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிளைகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பெரியசாமி அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X