பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத கிரிக்கெட் மைதானம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே உள்ள மாவட்ட கிரிக்கெட் மைதானத்தை மேம்படுத்த கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் எதிரில்,இளைஞர்கள் பயனடையும் வகையில்,2015ல்,சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் கட்டமாக 12 ஏக்கரில் 26 லட்சம் செலவில் கிரிக்கெட் மைதானம்

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே உள்ள மாவட்ட கிரிக்கெட் மைதானத்தை மேம்படுத்த கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே அண்ணா பல்கலைக்கழகம் எதிரில்,இளைஞர்கள் பயனடையும் வகையில்,2015ல்,சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் கட்டமாக 12 ஏக்கரில் 26 லட்சம் செலவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.அப்பகுதியில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மாவட்ட கிரிக்கெட் மைதானம் என்ற பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

மைதானத்தில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில்,அவ்வப்போது கருவேல மரங்கள் முளைப்பதும்,அதை அகற்றி இளைஞர்கள் கிரிக்கெட் பயிற்சியில்,ஈடுபடுவதும் மட்டுமே இன்றளவும் நடைபெற்று வருகின்றன.சர்வதேச தரத்தில் மைதானம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும்,மற்ற பணிகளும்,கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X