ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க... அலைக்கழிக்காதீங்க! உத்தரவை கடைபிடித்தால் சிக்கல் இல்லை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், 'பயோமெட்ரிக்' பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், வயதானோர் விண்ணப்ப படிவம் பெற அலைக்கழிக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களில், 389 ரேஷன் கடைகளில்,
 ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க...  அலைக்கழிக்காதீங்க!  உத்தரவை கடைபிடித்தால் சிக்கல் இல்லை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், 'பயோமெட்ரிக்' பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும், வயதானோர் விண்ணப்ப படிவம் பெற அலைக்கழிக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்களில், 389 ரேஷன் கடைகளில், இரண்டு லட்சத்து, மூன்றாயிரத்து, 585 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தவிர்க்க, 'பயோமெட்ரிக்' முறை கொண்டு வரப்பட்டது.

ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள், கடைக்கு வந்து, கைரேகை பதிவு செய்தால், பொருட்கள் வினியோகம் செய்யும் நடைமுறை உள்ளது.அலைக்கழிப்புரேஷன் கடைகளில் 'சர்வர்' பிரச்னையால்,பயோ மெட்ரிக் பதிவு தாமதமாகிறது. மேலும், பொருட்கள் வாங்க செல்வோரின் கைரேகை உடனடியாக பதிவு ஆகாமல், பல முறை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை பதிவாகாத சூழலில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டு, பொருட்கள் வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், வயதானோர் கடைகளுக்கு சென்று, கைரேகை பதிவாகாவிட்டால் தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொண்டு வந்தால் பொருட்கள் வினியோகிக்கப்படும், என, பெரும்பாலான ரேஷன்கடைகளில் திருப்பி அனுப்புகின்றனர்.

இதனால், தாலுகா அலுவலகத்துக்கும், ரேஷன் கடைக்கும் வயதானோர் அலைமோதுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு, பதிவு செய்ய தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயந்திரம் மாற்றுங்க!தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் கடைகளில் காலதாமதம் தவிர்க்க, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய இயந்திரம் வழங்க வேண்டும். அரசு வழங்கிய விண்ணப்ப படிவம், கடைகளில் வழங்கப்படுகிறது.

நடைமுறையை மாற்றி, பொதுமக்களிடம் இருந்து, 'ஓ.டி.பி.,' (ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொல்) பெற்று, பொருட்கள் வழங்க ஏதுவாக விற்பனை முனையத்தை மேம்படுத்த வேண்டும். கடைகளில் அனைத்து பொருட்களும் முறையாக கிடைக்க ஒதுக்கீடு சரியாக செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன்கூறியதாவது:கோவை மாவட்டத்தில் உள்ள, 1,423 ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் பதிவு வாயிலாக பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

வயதான கணவன், மனைவி என இருவர் மட்டும் இருந்தால், அவர்களை அலைக்கழிக்காமல், கடைகளில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டு, பொருட்களை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரேஷன் கார்டில் வயதானோர் மட்டுமின்றி மற்ற உறுப்பினர்கள் இருந்தால், அவர்களை வரவழைத்து கைரேகை வைத்து பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X