திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மாணவர் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மாணவர் விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 25, 2021
Share
ராமநாதபுரம் : மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தாட்கோவின் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம் மாணவர்களுக்கு குறுகிய காலமாக ஒன்று முதல் ஆறு மாதம் வரை திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டணமின்றி வழங்கப்படுகிறது. www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்து

ராமநாதபுரம் : மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தாட்கோவின் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம் மாணவர்களுக்கு குறுகிய காலமாக ஒன்று முதல் ஆறு மாதம் வரை திறன் மேம்பாட்டு பயிற்சி கட்டணமின்றி வழங்கப்படுகிறது. www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்து விரும்பும் பயிற்சியில் மாணவர்கள் சேரமுடியும்.

போக்குவரத்து படிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். அரசு மானியத்தில் வங்கி கடன்உதவியும் பெறலாம் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X