பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.16 கோடி ஊசி மருந்துக்கு பரிதவிக்கும் 7 மாத குழந்தை

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கிருஷ்ணகிரி : தசைநார் சிதைவு நோயால் பாதித்த குழந்தையை காப்பாற்ற, 16 கோடி ரூபாய் ஊசி மருந்து செலுத்த முடியாமல், ஏழை பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 30; மனைவி பிரியதர்ஷினி; குடிசை தொழில் செய்கின்றனர். இவர்களது 7 மாத பெண் குழந்தையின் போக்கில், நான்கு மாதங்களாக மாற்றத்தை கண்டனர்.பெங்களூரு
 ரூ.16 கோடி ஊசி மருந்துக்கு பரிதவிக்கும் 7 மாத குழந்தை

கிருஷ்ணகிரி : தசைநார் சிதைவு நோயால் பாதித்த குழந்தையை காப்பாற்ற, 16 கோடி ரூபாய் ஊசி மருந்து செலுத்த முடியாமல், ஏழை பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 30; மனைவி பிரியதர்ஷினி; குடிசை தொழில் செய்கின்றனர். இவர்களது 7 மாத பெண் குழந்தையின் போக்கில், நான்கு மாதங்களாக மாற்றத்தை கண்டனர்.

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், மரபணு பாதிப்பால் ஏற்படும் எஸ்.எம்.ஏ., - டைப் 1 என்ற தசைநார் சிதைவு நோய் இருப்பது தெரிந்தது.
'குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசி மூலம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் தயாராகும் இந்த மருந்தின் விலை, 16 கோடி ரூபாய். 2 வயதுக்குள் செலுத்தாவிடில் உயிருக்கு ஆபத்து' என டாக்டர்கள் கூறவே, பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

'முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்துள்ளோம். மத்திய அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் மக்கள் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவ வேண்டும்' என கண்ணீர் மல்க பெற்றோர் கூறினர்.உதவிக்கு, 90922 - 20459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
26-ஆக-202117:13:11 IST Report Abuse
DVRR இந்த மாதிரி ரூ 16 கோடி ஊசி போட்டுக்கொண்ட குழந்தை 12 நாட்களில் இறைவனடி சேர்ந்தது . இந்த ஊசி உயிருக்கு காரண்டீ கொடுக்குமா இல்லை குழந்தை இறந்தால் அந்த பணம் திருப்பி கொடுக்கப்படுமா???
Rate this:
Cancel
Bala - Bangalore,இந்தியா
26-ஆக-202113:17:36 IST Report Abuse
Bala இந்த மருந்தின் விலை குறைக்க வழிமுறைகளை ஆராய வேண்டும்.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
26-ஆக-202106:39:02 IST Report Abuse
Perumal So far ,where these people were there.Suddenly there seems to be rise in requirement. Every week one news is coming.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X