பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 350 இடத்தில் விநாயகர் சிலை; ஹிந்து முன்னணி ஏற்பாடு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.10ல் ஹிந்து முன்னணி சார்பில் 350 இடங்களில் 3 முதல் 9 அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி சார்பில் கலெக்டர் சந்திரகலா, எஸ்.பி., கார்த்திக், டி.ஐ.ஜி., மயில்வாகனன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: மாவட்டத்தில் ஹிந்து முன்னணி

ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.10ல் ஹிந்து முன்னணி சார்பில் 350 இடங்களில் 3 முதல் 9 அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.

ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி சார்பில் கலெக்டர் சந்திரகலா, எஸ்.பி., கார்த்திக், டி.ஐ.ஜி., மயில்வாகனன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: மாவட்டத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம். செப்.10ல் விநாயகர் சதுர்த்தி அன்று ராமநாதபுரத்தில் 36 இடங்கள், பரமக்குடியில் 50, ராமேஸ்வரத்தில் 21, தங்கச்சிமடத்தில் 10, பாம்பனில் 10, மண்டபத்தில் 16, உச்சிப்புளி பகுதியில் 26 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 350 இடங்களில் 3 முதல் 9 அடி உயர விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உள்ளோம்.

செப்.11, 12 தேதிகளில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. அரசு கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலை நிறுவப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும். ஹிந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், எழுச்சி விழாவாகவும் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X