அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் பங்களிப்புடன் 5 மாவட்டங்களில் அரிசி ஆலை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புகள்:* சென்னை வடக்கு சரகத்தில், வில்லிவாக்கம், ஆவடி, திருவொற்றியூர் மண்டலங்களில் உள்ள சில பகுதிகளை தனியாக சேர்த்து, கொளத்துாரை தலைமையிடாக்கி, புதிய மண்டல அலுவலகம் ௧ கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்* உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில், அண்ணா மேலாண்மை பயிற்சி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்புகள்:

* சென்னை வடக்கு சரகத்தில், வில்லிவாக்கம், ஆவடி, திருவொற்றியூர் மண்டலங்களில் உள்ள சில பகுதிகளை தனியாக சேர்த்து, கொளத்துாரை தலைமையிடாக்கி, புதிய மண்டல அலுவலகம் ௧ கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்

* உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும்

* பள்ளி மற்றும் கல்லுாரிகளில் செயல்பட்டு வரும், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் வாயிலாக 50 லட்சம் ரூபாய் செலவில், நுகர்வோர் உரிமை நாள் அனுசரிக்கப்படும்

* திருச்சி மற்றும் கோவையை தலைமைஇடமாக்கி, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையில், புதிய மண்டலங்கள் அமைக்கப்படும்

* ரேஷன் பொருட்களின் நகர்வை கண்காணிக்க, ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அறை, நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும். நபார்டு வங்கி நிதியுதவியுடன், தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களும் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்படும்

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். நவீன அரிசி ஆலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படும்

* தனியார் பங்களிப்புடன், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில், நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுமானம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

* திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களுக்கு 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்படும்

* தானிய பரிசோதனை கூடம் 7.50 கோடி ரூபாய் செலவில், நவீன பகுப்பாய்வு உபகரண வசதிகளுடன் மேம்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,400 டன் கொள்ளவு உள்ள கிடங்கு 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாகஉள்ள 91 பணியிடங்கள் நிரப்பப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X