பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சியால் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், ஆக., 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் செயலர் சகாயம் தலைமையில் நடந்தது. இதில்,ராமேஸ்வரத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள விசைபடகுகளால், மீன்வரத்து குறைகிறது. எனவே புதிய படகை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறினால்

ராமேஸ்வரம் : டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சியால் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், ஆக., 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் செயலர் சகாயம் தலைமையில் நடந்தது. இதில்,ராமேஸ்வரத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள விசைபடகுகளால், மீன்வரத்து குறைகிறது.

எனவே புதிய படகை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறினால் அப்படகை வெளியேற்றும் வரை போராட்டம் நடத்துவது, தடை செய்த வலையில் மீன்பிடிக்க கூடாது, மீறினால் அப்படகு மீது மீன்துறை, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து, படகை கரையில் ஏற்றி வைப்பது எனவும், கடந்தாண்டு 21 படகுகள் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து மீன்துறை விசாரித்து அனுமதி சீட்டு, மானிய டீசல் வழங்க வேண்டும்.

டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே டீசல் விலையை குறைக்க கோரி ஆக., 28 முதல் வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானத்தில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X