பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் படகு சிக்கியது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் 3ம் கட்ட சோதனை நடத்திய போது, பாலத்தை கடக்க முயன்ற இரு விசைப்படகுகள் பாறையில் ஏறி சிக்கியது.கடந்த ஜூன் 28 ல் பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்பட்டதும், ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துாக்கு பாலத்தில் சேதமடைந்த இரும்பு பிளேட், துாண்களை அகற்றி புதுப்பிக்கும் பணி நடந்து

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் 3ம் கட்ட சோதனை நடத்திய போது, பாலத்தை கடக்க முயன்ற இரு விசைப்படகுகள் பாறையில் ஏறி சிக்கியது.

கடந்த ஜூன் 28 ல் பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தில் அதிர்வு ஏற்பட்டதும், ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துாக்கு பாலத்தில் சேதமடைந்த இரும்பு பிளேட், துாண்களை அகற்றி புதுப்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில், ஆக., 19, 23 ல் பாலத்தில் காலி ரயில் பெட்டியுடன் சோதனை நடத்தி, பாலத்தின் உறுதி தன்மை குறித்து ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் 3ம் கட்டமாக நேற்று துாக்கு பாலத்தை திறந்து மூடி உறுதி தன்மை குறித்து சோதனை செய்தனர். சிக்கிய படகு : துாக்கு பாலம் திறந்திருந்த போது பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து படகு கடலான ராமேஸ்வரம், மண்டபம் கடற்கரை செல்ல சில விசைபடகுகள் பாலத்தை கடந்து சென்றது. அப்போது இரு படகுகள் கால்வாய் விட்டு திசைமாறி, பாறை மீது ஏறி சிக்கியது. இரு படகையும் வேறு இரு படகுகளின் உதவியுடன் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X