பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலத்தில் வெற்றிலை விலை உயர்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : வெற்றிலை மகசூல் குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.வெற்றிலை தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவிரிக்கரை, மதுரை சோழவந்தான், நாமக்கல் பரமத்தி வேலுார், போத்தனுார் பகுதிகளிலும், மற்றும் கரூர், திருச்சி மாவட்டங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெற்றிலைப்

ஆர்.எஸ்.மங்கலம் : வெற்றிலை மகசூல் குறைவால், வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெற்றிலை தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தேனி மாவட்டம் சின்னமனூர், கூடலூர் காவிரிக்கரை, மதுரை சோழவந்தான், நாமக்கல் பரமத்தி வேலுார், போத்தனுார் பகுதிகளிலும், மற்றும் கரூர், திருச்சி மாவட்டங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வெற்றிலைப் பயிருக்கு விதை ஏதும் இல்லாத நிலையில், காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் வெற்றிலை சாகுபடி செய்கின்றனர்.

கடந்த சில மாதமாக, கடும் வறட்சி நிலவி வருவதால், வெற்றிலை மகசூல் பாதிப்படைந்து, வெளியூர்களுக்கு வரும் வெற்றிலை வரத்து குறைந்துள்ளது. இதனால், ரூ.140 க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெற்றிலை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில், ரூ 250 ரூபாய் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X