பொது செய்தி

தமிழ்நாடு

சாயல்குடி பெரிய கண்மாயில் ஆக்கிரமிப்பு: துார்வாரியும் தண்ணீர் தேங்காத அவலம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி பெரிய கண்மாய் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.78 லட்சம் செலவில் பணி நடந்தும் தண்ணீர் தேங்காத நிலை நீடிக்கிறது.சாயல்குடி பெரிய கண்மாய் 511 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.217.39 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.பெரிய கண்மாய்க்கு கமுதியில் இருந்து வரக்கூடிய சங்கரதேவன் கால்வாய், நாராயணகாவிரி கால்வாய் மூலம் நீர்வரத்து இருக்கும். இந்தப் பகுதி

சாயல்குடி : சாயல்குடி பெரிய கண்மாய் பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.78 லட்சம் செலவில் பணி நடந்தும் தண்ணீர் தேங்காத நிலை நீடிக்கிறது.

சாயல்குடி பெரிய கண்மாய் 511 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.217.39 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.பெரிய கண்மாய்க்கு கமுதியில் இருந்து வரக்கூடிய சங்கரதேவன் கால்வாய், நாராயணகாவிரி கால்வாய் மூலம் நீர்வரத்து இருக்கும். இந்தப் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கண்மாய்க்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானங்கள் உள்ளது.

முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் செய்து பின்னர் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் தேக்க முடியும். தூர்வாரும் பணி 2020ல் ரூ.78 லட்சம் செலவில் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.சாயல்குடி பெரிய கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம். சம்சு கூறியதாவது;

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் அடுத்ததாக511 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்மாயாக சாயல்குடி பாசன கண்மாய் விளங்குகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

கண்மாய்க்கு வரக்கூடிய வரத்துக்கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை.கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.கடந்த ஆட்சியில் குடிமராமத்து என்ற திட்டத்தில் ரூ.78 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடந்தது. இதில் பெரும்பாலான சீமை கருவேல மரங்களை அகற்ற வில்லை.கண்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் பெயரளவிற்கு பள்ளம் தோண்டி உள்ளனர்.அதனால் எவ்வித பயன்பாடும்இல்லை. பாசன கண்மாய் தூர்வாரும் பணியில் விவசாயிகளை கலந்து ஆலோசித்து முடிவெடுக்காமல் தன்னிச்சையாக செய்ததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.--------

சாயல்குடி விவசாயி பாஸ்கரன் கூறியதாவது;வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை புகார் மனு விவசாய சங்கத்தின் சார்பில் கலெக்டருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மழுப்பலான பதிலையே தெரிவிக்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் உடன் இணைந்து அதிகாரிகள் செயல்படுகின்றனர்.பாசன கண்மாயை ஒட்டி பேரூராட்சியின் நகர் பகுதி அமைந்துள்ளதால் பெரும்பாலான குப்பைகள் கரையோரப் பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.

சாயல்குடி பாசன கண்மாய் விவசாயிகள் சங்க நிர்வாகி எம். பெத்தராஜ் கூறியதாவது;கடந்த ஆண்டு அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டாலும் சாயல்குடி பெரிய கண்மாயில் நீர் தேக்க வழியில்லாமல் உள்ளது.கண்மாயின் நடுப் பகுதியில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய சாயல்குடி பெரிய கண்மாய் தற்போது வரை நிரம்பாமல் உள்ளது. கண்மாய் நிரம்பும் பட்சத்தில் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உவர் நீரில் இருந்து நன்னீராக மாறும் வாய்ப்பு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், சாயல்குடியில் நீராதாரமாக விளங்கும் பாசன கண்மாயை முறையாக துார்வாரி, கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X