பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தற்போது நடக்கிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக, வீடு, வீடாக சென்று, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவர்கள், வேறுபகுதிக்கு சென்றவர்கள், ஒருவரின் பெயர், இரண்டு அல்லது மூன்று இடங்களில்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தற்போது நடக்கிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாயிலாக, வீடு, வீடாக சென்று, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இறந்தவர்கள், வேறுபகுதிக்கு சென்றவர்கள், ஒருவரின் பெயர், இரண்டு அல்லது மூன்று இடங்களில் உள்ளது, திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரிபார்ப்பு பணிக்கு வரும் போது, சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கலாம்.

மேலும், ஓட்டுச்சாவடியில் உள்ள வசதிகள், ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதா, உள்ளிட்ட விபரங்களும் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரைவு வாக்காளர் பட்டியல் நவ., 1ம் தேதி வெளியிடப்படும். அதன்பின், ஆட்சேபனை, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் நவ., 30ம் தேதி வரை பெறப்படும்.சிறப்பு முகாம்கள், இரண்டு வாரங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். அப்போது, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X