பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் தேக்கமாக மாறிய வண்ணான்குளம் கண்மாய்; மனைகளாக மாறிய விளை நிலங்கள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை நகர் எல்லைக்குள் அமைந்துள்ள வண்ணான்குளம் கண்மாய் கழிவுநீர் தேக்கமாக மாறியதை அடுத்து வயல்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு குடியிருப்புகளாகி வருகின்றன.மானாமதுரை அரசு மருத்துவமனை எதிரே உள்ள வண்ணான்குளம் கண்மாய் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது. இந்த கண்மாய்க்கு நீர் வரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு மனைகளாக

மானாமதுரை : மானாமதுரை நகர் எல்லைக்குள் அமைந்துள்ள வண்ணான்குளம் கண்மாய் கழிவுநீர் தேக்கமாக மாறியதை அடுத்து வயல்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு குடியிருப்புகளாகி வருகின்றன.

மானாமதுரை அரசு மருத்துவமனை எதிரே உள்ள வண்ணான்குளம் கண்மாய் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது. இந்த கண்மாய்க்கு நீர் வரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டதால் கண்மாய்க்கு தண்ணீர் வராத நிலையில் விளை நிலங்களை தரிசானது. காலப்போக்கில் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்று விட்டனர்.

தற்போது அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி விட்டன.வண்ணான்குளம் கண்மாயில் மாரியம்மன் கோயில் தெரு,பழைய தபால் ஆபிஸ் தெரு, வண்ணான் குளம் போகும் சந்து, பழைய காளையார் கோயில் ரஸ்தா பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீரை வண்ணான்குளம் கண்மாயில் சேர்கிறது. இங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், நீரின் சுவையும் மாறி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் 48,கூறுகையில், வண்ணான்குளம் கண்மாய் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலையில் மழைநீர் வரத்து கால்வாய் அடைபட்டு போனதால கண்மாய்க்கு நீர் வரத்து இல்லை. தொடர்ந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்று விட்டனர். இந்த கண்மாய்க்கு அருகில் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உருவாகி உள்ள நிலையில் இந்த கண்மாயில் தேங்கி உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி மழை நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X