சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் சம்பள கணக்கு குளறுபடியால் 2 மாதமாக சம்பளம் கிடைக்காமல் நிரந்தர பணியில் உள்ள நர்ஸ்கள் தவிக்கின்றனர்.
இங்கு பணி நிரந்தர அடிப்படையில் கொரோனா காலத்தில் 130 க்கும் மேற்பட்ட நர்ஸ்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 30 பேர் தவிர்த்து மற்றவர்களுக்கு நேரடியாக சுகாதாரத்துறையினர் வங்கி கணக்கில் சம்பளத்தை வரவு வைக்கிறது. மற்ற 30 பேரை அரசு மருத்துவமனை நிர்வாகம் மாற்று கணக்கில் வைத்து சம்பளம் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 30 பேருக்கு சம்பளம் போட சுகாதாரத்துறையில் அனுமதி பெற வேண்டும். இங்குள்ள நிர்வாக அலுவலர்கள் இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை பெற்றுத்தர முயற்சிக்காமல், சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனுமதி கடிதம் வந்ததும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் நிரந்தர பணியாளராக உள்ள 30 நர்சுகள் கடந்த ஜூன், ஜூலை சம்பளத்தை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE