அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்களை நோக்கி ரேஷன்' மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சின்னதுரை: கூட்டுறவு தேர்தல் தொடர்பாக, பல வழக்குகள் உள்ளன; அவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 2018ல் கூட்டுறவு தேர்தல் நடத்தப் பட்டது. நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், ஐந்தாவது கட்ட தேர்தல் நடக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தலை, ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும்.தற்போது கூட்டுறவில் மாநிலம், மாவட்டம், கிராமம் என, மூன்று அடுக்கு முறை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சின்னதுரை: கூட்டுறவு தேர்தல் தொடர்பாக, பல வழக்குகள் உள்ளன; அவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 2018ல் கூட்டுறவு தேர்தல் நடத்தப் பட்டது. நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், ஐந்தாவது கட்ட தேர்தல் நடக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தலை, ஜனநாயகப்பூர்வமாக நடத்த வேண்டும்

.தற்போது கூட்டுறவில் மாநிலம், மாவட்டம், கிராமம் என, மூன்று அடுக்கு முறை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. கடந்த ஆட்சியில், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 5,000 கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கப்பட்டது. இதனால், கூட்டுறவு வங்கிகள் நிதியின்றி, விவசாயிகளுக்கு கடன் வழங்க முடியவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்க வேண்டும்.

பயிர் கடன் முழுதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் கடன் வழங்க, எளிமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.நகை, பயிர் கடன் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை நோக்கி மருத்துவம் என்ற முறையில், மக்களை நோக்கி ரேஷன் என திட்டமிட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில், 5,313 ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X