உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு கூட்டம்

Added : ஆக 26, 2021
Share
சிவகங்கை : உழவர் சந்தைகளில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம்நடத்தப்பட்டது.உழவர் சந்தைகளில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை அருகே கானாடுகாத்தான், முள்ளிக்குண்டு கிராமங்களில் நடந்தது. வேளாண் வணிக துணை இயக்குநர் சுரேஷ்

சிவகங்கை : உழவர் சந்தைகளில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம்நடத்தப்பட்டது.

உழவர் சந்தைகளில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை அருகே கானாடுகாத்தான், முள்ளிக்குண்டு கிராமங்களில் நடந்தது. வேளாண் வணிக துணை இயக்குநர் சுரேஷ் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவித்தார்.

இடைத்தரகர்கள் இன்றி பொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளை எடுத்து வர பஸ் கட்டணம் இல்லை. உழவர் சந்தைகளில் எடை தராசு, பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழிமரகதம், உதவி வேளாண் அலுவலர்கள் சாதிக்அகமது, சிவரஞ்சனி, ரம்யா உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X