பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம்; தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மதுரை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.சிவகங்கை மாவட்டம் கீழவாணியகுடி கேசவன் தாக்கல் செய்த மனு:சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலராக (சுயே.,) வெற்றி பெற்றேன். ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா அ.தி.மு.க.,சார்பில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். நான் துணைத் தலைவராக தேர்வு

மதுரை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

சிவகங்கை மாவட்டம் கீழவாணியகுடி கேசவன் தாக்கல் செய்த மனு:சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலராக (சுயே.,) வெற்றி பெற்றேன். ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா அ.தி.மு.க.,சார்பில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். நான் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., வென்று ஆட்சியமைத்ததும், உள்ளாட்சி அமைப்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத் தலைவர் மஞ்சுளா, அ.தி.மு.க.,கவுன்சிலர்களாக வெற்றி பெற்ற வேல்முருகன், லட்சுமி, தே.மு.தி.க., கவுன்சிலராக வென்ற ரமேஷ் தி.மு.க.,விற்கு மாறினர். இதனால் தி.மு.க.,கவுன்சிலர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கட்சி மாறியவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்து, தி.மு.க.,கவுன்சிலரை துணைத் தலைவராக தேர்வு செய்ய முயற்சிக்கின்றனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கேசவன் மனு செய்தார்.நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி உத்தரவு: இம்மனு ஏற்புடையதல்ல. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திற்கு முரணாக எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கருதினால் அதை எதிர்த்து மனுதாரர் நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X