அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க கடன்களில் விதிமீறல்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தால், 15 நாட்களில் வழங்கும் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்; ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக கொடுக்க, அரசு முன்வருமா; அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள், 'டிவி' இணைப்பு இலவசமாக வழங்கப்படுமா; சூரிய சக்தி அடுப்பு, மூன்று எல்.இ.டி., விளக்கு எப்போது வழங்கப்படும்?பத்து ஆண்டுகள், கூட்டுறவுத் துறையில் அமைச்சராக

அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தால், 15 நாட்களில் வழங்கும் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்; ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக கொடுக்க, அரசு முன்வருமா; அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள், 'டிவி' இணைப்பு இலவசமாக வழங்கப்படுமா; சூரிய சக்தி அடுப்பு, மூன்று எல்.இ.டி., விளக்கு எப்போது வழங்கப்படும்?

பத்து ஆண்டுகள், கூட்டுறவுத் துறையில் அமைச்சராக இருந்தது நான் மட்டும் தான். அது, கூட்டுறவுத் துறையின் பொற்காலமாக இருந்தது. கடந்த 2011 - 2021 மார்ச் வரை, 1.98 லட்சம் விவசாயிகளுக்கு, 60 ஆயிரத்து 440 கோடி ரூபாய், வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 69 ஆயிரத்து 333 மாற்றுத் திறனாளிகளுக்கு 29௨ கோடி ரூபாய் கடன் வழங்கி, இரண்டு முறை தேசிய விருதை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளேன்.

அமைச்சர் பெரியசாமி: மத்திய கூட்டுறவு வங்கிகளில் 2001 - 2006 வரையிலான காலத்தில், 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின; 10 மட்டும் லாபத்தில் இயங்கின. அதன்பின், கருணாநிதி ஆட்சியில் 23 வங்கிகள் லாபத்திற்கு வந்தன.மத்திய அரசு நிதி, 'நபார்டு' நிதியில் கிடங்குகள் கட்டப்பட்டன. இவை பயனில்லாமல் இருந்தன. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை, மத்திய கூட்டுறவு வங்கியுடன் 10 ஆண்டுகளாக இணைக்கவில்லை. சங்கங்களில் வசூலாகும் கடன்களை வங்கிக்கு செலுத்தாமல், அங்கேயே வைத்து கடன் வழங்குவது, 1 ஏக்கருக்கு 10 ஏக்கருக்கு கடன் வழங்கியதுபோல் விதிமீறல்கள் நடந்துள்ளன.

ராஜு: நீங்கள் ஐந்து ஆண்டுகளில் 9,500 கோடி ரூபாய் கடன் கொடுத்தீர்கள். நாங்கள் 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளோம்.

அமைச்சர் பெரியசாமி: கடந்த ஆட்சியில், 1 லட்சம் கோடியில் 10 சதவீதம் கடன் வழங்கி உள்ளனர். ஆனால் 2006 - 2011ல் 15 சதவீதம் கடன் வழங்கப்பட்டது.தற்போது 10 சதவீதம் என்பதை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். கடன் சங்கங்களில், கடன் வாங்கியவர்களே மீண்டும் வாங்குகின்றனர்.இதை தவிர்க்க, இதுவரை 2.30 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்: தி.மு.க., ஆட்சியில் 22 ஆண்டுகள் புதிய உறுப்பினர்களை சேர விடாமல் தடுத்து வைத்திருந்தனர். ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்து, தேர்தல் நடத்தலாம் என்ற உத்தரவை நீதிமன்றத்தில் பெற்று தந்தார்.

அமைச்சர் பெரியசாமி: கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை; அவர்கள் நியமிக்கப்பட்டனர். கூட்டுறவு சங்கங்களை பூட்டிவிட்டு, தேர்தல் எங்கு நடக்கிறது என்பதை தெரிவிக்காமல் தேர்தல் நடத்தப்பட்டது. இது ஜனநாயகமா? நீதிமன்றம், 400 சங்கங்களில் முறைகேடாக தேர்தல் நடந்துள்ளதாகக் கூறி, மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

ராஜு: ஜனநாயக முறைப்படி தேர்தல் ஆணையம் அமைத்து தேர்தல் நடத்தப்பட்டது. ஆண்டு தோறும் 30 சதவீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். தற்போது கூட்டுறவு சங்கங்களில் 60 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை வைத்துள்ளோம். தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. 400 சங்கங்களில் தேர்தல்முறைகேடு என நீதிமன்றம் கூறி, ரத்து செய்யவில்லை. பயிர் கடன் தள்ளுபடிக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X