கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு வகுத்த விதிகள் செல்லும்'

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'மத நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகிக்க, பாதுகாக்க, 1964ல் ஏற்படுத்தப்பட்ட விதிகள் செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, ஆலய வழிபடுவோர் அமைப்பின் நிர்வாகி, டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோவில்களின் சொத்துக்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை தான் பாதுகாப்பு. இதை முறையாக பராமரித்து, பாதுகாக்க

சென்னை:'மத நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகிக்க, பாதுகாக்க, 1964ல் ஏற்படுத்தப்பட்ட விதிகள் செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, ஆலய வழிபடுவோர் அமைப்பின் நிர்வாகி, டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோவில்களின் சொத்துக்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை தான் பாதுகாப்பு. இதை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டிய கடமை அத்துறைக்கு உள்ளது.

அறநிலையத் துறை சட்ட அதிகாரங்களை மீறி, கோவில்களுக்குள் கட்டடங்கள் கட்டுவது, மாற்றம் செய்வது, சிலைகளை மாற்றுவது என, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத நிறுவனங்களின் சொத்துக்களை நிர்வகிக்க, பாதுகாக்க, 1964ல் அரசு விதிகள் வகுத்தது. இந்த விதிகள், அறநிலையத் துறை சட்ட அதிகார வரம்பை மீறுவதாக உள்ளது. இதை, செல்லாது என அறிவிக்க வேண்டும்.

உரிய விதிகள் வகுக்கப்படும் வரை, கோவிலுக்குள், அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் கோவில் சொத்துக்களில், கட்டுமானம், சீரமைப்பு, பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக படித்தால், கோவில் மற்றும் அதன் சொத்துக்களை பாதுகாக்கும் கடமை, அறநிலையத் துறைக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை; அந்த நோக்கத்துக்காக தான், அரசுக்கு விதிகளை வகுக்க, சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மத நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாக்க, பராமரிக்க, நிர்வகிக்க, மேம்படுத்த, விதிகள் வகுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, ஏற்படுத்தப்பட்ட விதிகள், அறநிலைய துறை சட்ட வரம்பை மீறுவதாக இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு விதிகள் இருக்கும்போது, அதில் குறுக்கிட முகாந்திரம் இல்லை.

இந்த விதிகள் செல்லும்.இருந்தாலும், கால மாற்றங்கள், தேவை கருதி, தேவையற்றதை நீக்கி, விதிகளில் வராத புதிய அம்சங்கள் தொடர்பானவற்றை அறிமுகப்படுத்த, இந்த விதிகளை மறுபரிசீலனை செய்யலாம். கோவில் நிர்வாகம் தொடர்பாக, 2021 ஜூனில் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தற்போதைய விதிகளை மறுபரிசீலனை செய்யலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
26-ஆக-202118:15:14 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஆலய வழிபடுவோர் அமைப்பின் நிர்வாகி, டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியல்ல. இவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X