வாகனங்களில் அத்துமீறலால் அச்சம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை தாலுகா பகுதிகளில், உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு இல்லாததால், சமூக விலகலின்றி வாகனத்தில் பயணிப்பது அதிகரித்து வருகிறது.கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ஆனைமலை தாலுகாவில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தது.அப்போது, போலீசார், உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பைக்கில் 'டிரிபில்ஸ்' வருவோர்,

ஆனைமலை : ஆனைமலை தாலுகா பகுதிகளில், உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு இல்லாததால், சமூக விலகலின்றி வாகனத்தில் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ஆனைமலை தாலுகாவில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று பாதிப்பு இருந்தது.அப்போது, போலீசார், உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரத்துறை அதிகாரிகள், பைக்கில் 'டிரிபில்ஸ்' வருவோர், காரில் கூட்டமாக வருவோர் மற்றும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.இனி வரும் நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என, மத்திய சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஆனைமலை தாலுகா முழுவதிலும், போலீசார், ஊராட்சி, பேரூராட்சியினர், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால், மக்கள் கூட்டமாக கூடுகின்றனர், பலரும் முகக்கவசம் அணியாமல் நடமாடுகின்றனர். கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பைக், கார்களில் கட்டுப்பாடுகளின்றி, சமூக விலகலின்றி அதிகப்படியான நபர்கள் பயணிக்கின்றனர். ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல் சென்று பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, தீவிர கண்காணிப்பு மேற்கொண்டால் மட்டுமே, அடுத்த கொரோனா அலை வராமல் தடுத்து, மக்களை காக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X