பொது செய்தி

தமிழ்நாடு

போலிகளிடம் ஏமாற வேண்டாம் வேளாண் துறையினர் அறிவுரை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், அங்கீகாரம் இல்லாத நிறுவன முகவர்களிடம், உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி, ஏமாற வேண்டாம் என, விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் அறிக்கை:கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளை சந்தித்து, தென்னைக்கு தேவையான உரம்,

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், அங்கீகாரம் இல்லாத நிறுவன முகவர்களிடம், உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி, ஏமாற வேண்டாம் என, விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் அறிக்கை:கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளை சந்தித்து, தென்னைக்கு தேவையான உரம், வேர்வழி செலுத்தும் மருந்துகளை விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள், அந்த மருந்துகளை, விலை கொடுத்து வாங்கி ஏமாற வேண்டாம்.

தங்கள் பகுதிகள் அலுவலர்கள் மற்றும் வேளாண்துறை அலுவலர்களின் ஆலோசனை பெற்று, உரமிடுதல் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை, அங்கீகாரம் மற்றும் உரிமம் பெற்ற உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களிடம் இருந்து, உரிய விலையில் வாங்கி பயனடையலாம். தோட்டங்களுக்கு நேரில் வந்து, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம். போலி நபர்கள் குறித்த விபரங்களை, வேளாாண்துறையினரிடம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X