பொது செய்தி

தமிழ்நாடு

களரி போட்டியில் 9 பதக்கங்கள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மடத்துக்குளம் : தேசிய அளவில், களரி போட்டி, ஆன்லைன் வாயிலாக நடந்தது. தமிழகம் முழுவதும் பல பயிற்சி பள்ளிகளிலிருந்து, 55 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், மடத்துக்குளம் சிலம்பம் மற்றும் களரி பயிற்சி பள்ளி மாணவர்கள், 9 பதக்கம் வென்றனர்.ஜூனியர் பிரிவில், சுவடு முறை மற்றும் வடிபைட் போட்டியில், ஜீவா 2 வெள்ளி, சுருள்வாள் போட்டியில் ஒரு வெண்கலம், வடிபைட் போட்டியில்

மடத்துக்குளம் : தேசிய அளவில், களரி போட்டி, ஆன்லைன் வாயிலாக நடந்தது. தமிழகம் முழுவதும் பல பயிற்சி பள்ளிகளிலிருந்து, 55 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், மடத்துக்குளம் சிலம்பம் மற்றும் களரி பயிற்சி பள்ளி மாணவர்கள், 9 பதக்கம் வென்றனர்.

ஜூனியர் பிரிவில், சுவடு முறை மற்றும் வடிபைட் போட்டியில், ஜீவா 2 வெள்ளி, சுருள்வாள் போட்டியில் ஒரு வெண்கலம், வடிபைட் போட்டியில் ருத்ரேந்தர் ஒரு வெள்ளி, சப் ஜூனியர் பிரிவில், சுவடு முறை மற்றும் ஹை கிக் போட்டியில் யுவனேஷ்வர் 2 வெண்கலம் வென்றனர்.சப் ஜூனியர் சுவடுகள் பிரிவில், ஜெயனிஸ்ரீ ஒரு வெண்கலம், ஜூனியர் பெண்கள் பிரிவில் சுவடு முறை போட்டியில் கனிஷ்கா, ஒரு வெண்கலம், சுருள்வாள் போட்டியில் ஸ்ருதி ஒரு வெண்கலம் ஆகிய ஒன்பது பதக்கங்களை வென்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் செயலாளரும், ஆசிரியருமான வீரமணி கூறுகையில், ''தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய அளவில் தமிழ்நாடு மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X