மழையால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகள் கவலை

Added : ஆக 26, 2021
Share
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், கடந்த சில நாட்கள் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்துார் பகுதியில், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், தக்காளி பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நடவு செய்து குறிப்பிட்ட அளவு நாற்றுகள்

மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், கடந்த சில நாட்கள் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்துார் பகுதியில், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், தக்காளி பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நடவு செய்து குறிப்பிட்ட அளவு நாற்றுகள் வளர்ந்த விளைநிலங்களில், மழைநீர் தேங்கியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திடீர் மழையால், பலதரப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நடவு செய்து, 30 நாட்களைக் கடந்த தக்காளி மற்றும் வெங்காய பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் அழுகி விடும் அபாயம் உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X