சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசு பள்ளி ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:விளையாட்டு போட்டிக்கு அழைத்து வந்து பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிவஞானபுரம் அரசுமேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வனுக்கு 47, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிவஞானபுரம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர்

ஸ்ரீவில்லிபுத்துார்:விளையாட்டு போட்டிக்கு அழைத்து வந்து பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிவஞானபுரம் அரசுமேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வனுக்கு 47, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவஞானபுரம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் 47. இவர் 2018 ஆகஸ்ட் 3 ல் அதே பள்ளி பிளஸ் டூ மாணவியை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் தனியார் பள்ளியில் நடந்த மாநில கபடி போட்டியில் விளையாட அழைத்து வந்துள்ளார்.

உறவினர் வீட்டில் தங்கலாம் என கூறி அழைத்து வந்து ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்துள்ளார். அப்போது பாலியல் தொல்லை தர முயற்சித்து உள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி பாத்ரூமுக்குள் சென்று அலைபேசி மூலம் விருதுநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மகளிர் போலீசார் மாணவியை மீட்டனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி தனசேகரன், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வனுக்கு 14 ஆண்டு சிறை, ரூ .10 ஆயிரம் அபராதம் , பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X