கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி வசூலிக்காத அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:'சொத்து வரி வசூல் நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு மற்றும் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், வளையகாரனுார் கிராமத்தில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிக்கு, கூடுதல் சொத்து வரி செலுத்துமாறு, தட்டான்குட்டை கிராம

சென்னை:'சொத்து வரி வசூல் நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு மற்றும் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையகாரனுார் கிராமத்தில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிக்கு, கூடுதல் சொத்து வரி செலுத்துமாறு, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பு:தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டடங்களுக்கு, கூடுதல் சொத்து வரி விதிக்க, கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் உள்ளது. பல கல்வி நிறுவனங்கள், சொத்து வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும், இதனால் பல கிராமங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், விசாரணையின் போது தெரிய வந்தது.

அதிக கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குகின்றன. கிராம மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான பின்னும், கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது.அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலர், வரி விதிப்பு குழுவை அமைக்க வேண்டும்.

இதுவரை விதிக்கப்பட்ட வரிகள் முறையாக விதிக்கப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய, கலெக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சொத்து வரி செலுத்தாமல், ஏய்ப்பு செய்தவர்களின் விபரங்கள், செலுத்த வேண்டிய வரி பாக்கி விபரங்களை, கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையிலும், இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X