கொரோனா கேர் சென்டர் நீட்டிப்பு அரசு கல்லுாரி திறப்பதில் சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கேர் சென்டர் நீட்டிப்பு அரசு கல்லுாரி திறப்பதில் சிக்கல்

Added : ஆக 26, 2021
Share
வால்பாறை : வால்பாறை அரசு கலைக்கல்லுாரி, கொரோனா கேர் சென்டராக மாற்றப்பட்டதால், மீண்டும் கல்லுாரி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, வால்பாறை அரசு கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, இன்று முதல் நடக்கிறது.ஆனால், கடந்த, ஆறு மாதத்துக்கு முன்,

வால்பாறை : வால்பாறை அரசு கலைக்கல்லுாரி, கொரோனா கேர் சென்டராக மாற்றப்பட்டதால், மீண்டும் கல்லுாரி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் செப்., 1ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வால்பாறை அரசு கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை, இன்று முதல் நடக்கிறது.ஆனால், கடந்த, ஆறு மாதத்துக்கு முன், கல்லுாரியானது கொரோனா கேர் சென்டராக மாற்றப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா கேர் சென்டர் தொடர்ந்து நடப்பதால், மீண்டும் கல்லுாரி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:கல்லுாரியில் கொரோனா கேர் சென்டர் அமைத்துள்ளதால், மாணவர்கள் கல்லுாரிக்கு வந்து படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்லுாரியின் ஒரு பகுதி கேர் சென்டராகவும், மேல் தளம் மாணவர்கள் படிப்பதற்கு என்பது, பிரித்து செயல்படுத்துவது இயலாத காரியமாகும். எனவே, கல்லுாரியில் செயல்படும், கொரோனா கேர் சென்டரை, சின்கோனா அரசு மருத்துவமனை வளாகத்துக்கு இடமாற்றம் செய்தால் மட்டுமே, கல்லுாரி மீண்டும் வழக்கம் போல் செயல்பட முடியும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X