பொது செய்தி

தமிழ்நாடு

செப்., 16ல் தி.மலையில் தினகரன் மகள் திருமணம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செப்., 16ல், தினகரன் மகள் திருமணம் நடக்க உள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்த காங்., முன்னாள் எம்.பி., துளசி ஐயா வாண்டையார் பேரனும், காங்., மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாத துளசி ஐயா வாண்டையாருக்கும், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் மகள் ஜெயஹரினிக்கும், 2020 நவம்பரில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.கடந்த ஜூன் 13ல்,

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செப்., 16ல், தினகரன் மகள் திருமணம் நடக்க உள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த காங்., முன்னாள் எம்.பி., துளசி ஐயா வாண்டையார் பேரனும், காங்., மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாத துளசி ஐயா வாண்டையாருக்கும், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் மகள் ஜெயஹரினிக்கும், 2020 நவம்பரில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 13ல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இவர்கள் திருமணம் நடக்க இருந்தது. கொரோனா ஊரடங்கு மற்றும் மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் மறைவு காரணமாக, திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் செப்., 15ல், திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேல் திருமண மண்டபத்தில், நிச்சயதார்த்தம் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. மறுநாள் 16ல், அருணாசலேஸ்வரர் கோவில் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியில், காலை 8:30 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் திருமணம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X