சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எப்படி எல்லாம் திருடுறாங்க! முதியவரிடம் 30 சவரன் 'அபேஸ்'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பத்துார்:கடனை திருப்பி தருவதாக கூறி முதியவரை ஏமாற்றி 30 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், மண்டல நயன குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன், 70; விவசாயி. இவரது மனைவி லட்சுமி, 68, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மாடு மேய்க்க சென்று விட்டார்.அப்போது, தேவன் வீட்டுக்கு பைக்கில் வந்த இருவர், 'உங்கள் மனைவி லட்சுமியிடம் 2,000 ரூபாய் கடன்

திருப்பத்துார்:கடனை திருப்பி தருவதாக கூறி முதியவரை ஏமாற்றி 30 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், மண்டல நயன குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன், 70; விவசாயி. இவரது மனைவி லட்சுமி, 68, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மாடு மேய்க்க சென்று விட்டார்.அப்போது, தேவன் வீட்டுக்கு பைக்கில் வந்த இருவர், 'உங்கள் மனைவி லட்சுமியிடம் 2,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தோம், அதை கொடுக்க வந்தோம்' எனக் கூறியுள்ளனர்.

அதற்கு தேவன், அவர் மாடு மேய்க்க சென்றிருப்பதாக கூறினார். உடனே அவர்கள், மொபைல் போனில் லட்சுமியுடன் பேசுவது போல நடித்து, 'உங்களுக்கு கண் சரியாக தெரியாது என்பதால், பணத்தை பீரோவில் வைத்து விடும்படி லட்சுமி கூறினார்' என்றனர்.

இதை நம்பிய தேவன், அவர்களுடன் வீட்டுக்குள் சென்று பீரோவை திறந்தார். அதில், 500 ரூபாயை மட்டும் வைத்து விட்டு, அவர்கள் புறப்பட்டு சென்றனர்.மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்த லட்சுமியிடம் விபரத்தை தேவன் கூறிய போது, 'நான் யாருக்கும் கடன் கொடுக்கவில்லையே' என்றார். பீரோவை திறந்து பார்த்ததில் 30 சவரன் நகை திருட்டு போனது தெரிந்தது. கந்திலி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X