பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல், திண்டுக்கல்லில் இன்று நிழல் இல்லாத நாள்

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொடைக்கானல்: கொடைக்கானல், திண்டுக்கல்லில் நிழல் இல்லாத நாளை இன்று (ஆக., 26) காண முடியும் என கொடைக்கானல் வானியற்பியல் மையம் தெரிவித்துள்ளது.இம்மையத்தின் விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:நிழல் இல்லாத நாள் என்பது பூமியின் சுழல் பாதையை புரிந்து கொள்வதற்கான நாளாகும். கொடைக்கானல், பெரியகுளத்தில் இன்று மதியம் 12.22 மணிக்கும், திண்டுக்கல்லில் 12.20 மணிக்கும், ஆக.,27 மதுரையில் 12.19
கொடைக்கானல், திண்டுக்கல்லில் இன்று நிழல் இல்லாத நாள்

கொடைக்கானல்: கொடைக்கானல், திண்டுக்கல்லில் நிழல் இல்லாத நாளை இன்று (ஆக., 26) காண முடியும் என கொடைக்கானல் வானியற்பியல் மையம் தெரிவித்துள்ளது.
இம்மையத்தின் விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:
நிழல் இல்லாத நாள் என்பது பூமியின் சுழல் பாதையை புரிந்து கொள்வதற்கான நாளாகும். கொடைக்கானல், பெரியகுளத்தில் இன்று மதியம் 12.22 மணிக்கும், திண்டுக்கல்லில் 12.20 மணிக்கும், ஆக.,27 மதுரையில் 12.19 மணிக்கும், தேனியில் 12.22 க்கும், சிவகங்கையில் 12.18 மணிக்கும், திருநெல்வேலியில் ஆக.,30 12.20 மணிக்கும், கன்னியாகுமாரியில் செப்.,1 ல் 12.20 மணிக்கும் நிழல் இல்லாத சூரியனை காணமுடியும்.

கொடைக்கானலில் அட்சரேகை 10 டிகிரியில் இன்று 13 நிமிடங்கள் சூரியன் நேர் உச்சியில் வருவதால் நமது நிழல் பூமியில் விழாது. சுற்றுகிற பம்பரம் நிற்பதற்கு தலையை ஆட்டுவது போல் பூமி 23.5 டிகிரி கோணச்சரிவில் நீள்வட்டப்பாதையில் சூரியனைசுற்றுகிறது. இதனால் பருவ காலம் ஏற்படுகிறது.

இதில் ஆண்டில் இருமுறை நமக்கு நேர் உச்சிக்கு வரும்போது நிழல் இல்லாத நாள் நிகழ்வு நடைபெறும். மேலும் இதுகுறித்த சிறந்த புகைப்படங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது. அதனை இணைய தளமான outreach@iiap.res.in என்ற முகவரியில் அனுப்பலாம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-ஆக-202107:56:08 IST Report Abuse
Loganathan Kuttuva முக்கிய நிகழ்வு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X