கோரிக்கைகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 26, 2021
Share
உடுமலை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், நேற்று உடுமலை தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் உடுமலை தலைவர் வைதேகி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் உட்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும்,

உடுமலை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், நேற்று உடுமலை தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் உடுமலை தலைவர் வைதேகி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் மூர்த்தி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் உட்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தங்கம்மாள் ஓடை பகுதியில், கிடப்பில் போடப்பட்டுள்ள ரோடு மற்றும் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சமையல் காஸ் சிலிண்டரை குச்சிகளில் கட்டி, சுமந்து வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X