சில வரி செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 26, 2021
Share
மின்சாரம் தாக்கி சிறுவன் பலிவேலுார்: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே முள்ளுவாடி மலையைச் சேர்ந்தவர் நீலமேகம், 56; மகன் பூவரசன், 13. அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களோடு, பங்களாமேடு உமையம்பட்டு மலையடிவாரத்திற்கு நேற்று முன்தினம் சென்று, உண்டி வில்லால் அணிலை அடித்து பிடிக்க முயன்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பூவரசன்,

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

வேலுார்: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே முள்ளுவாடி மலையைச் சேர்ந்தவர் நீலமேகம், 56; மகன் பூவரசன், 13. அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களோடு, பங்களாமேடு உமையம்பட்டு மலையடிவாரத்திற்கு நேற்று முன்தினம் சென்று, உண்டி வில்லால் அணிலை அடித்து பிடிக்க முயன்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பூவரசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். பயத்தில், அவருடன் சென்ற மூன்று சிறுவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 29; பிளம்பர். இவர், 2015 ஜூலை 25ம் தேதி பைக்கில் சென்றபோது, அரசு டவுன் பஸ் மோதி படுகாயம் அடைந்தார். இவருக்கு, 19 லட்சத்து 35 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க, திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் தீர்ப்பளிதது.இழப்பீடு வழங்காததால், நீதிபதி உத்தரவுப்படி, சென்னையில் இருந்து திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட் வந்த அரசு பஸ்சை, கோர்ட் கட்டளை நிறைவேற்றுனர் யுவராஜ் ஜப்தி செய்து, கோர்ட்டுக்கு கொண்டு சென்றார்.

பயங்கரவாதிகள் ஊடுருவலா?

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து எட்டு பேர் வேதாரண்யம் பகுதியிலும், மூன்று பேர் தொண்டியிலும் கடல் வழியாக ஊடுருவியதாக உளவு பிரிவிலிருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் தலைமையில் தனிப்படையினர், ராமநாதபுரம் கியூ பிரிவு, தேவிபட்டினம் மரைன் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, எஸ்.பி. பட்டனம் முதல் தேவிபட்டினம் வரை இரவு முழுதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையோர மீனவ கிராமங்களில் விசாரித்தனர்.

லஞ்ச வி.ஏ.ஓ., கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார், 30; இவர் தந்தை ஏழுமலை பெயரில் 4 ஏக்கர் நிலம் வாங்கினார். அதை, பட்டா மாற்றம் செய்வதற்காக, தைலாபுரம் வி.ஏ.ஓ., ராஜு, 59 என்பவரிடம் விண்ணப்பித்தார். அவர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.உத்திரகுமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மதியம் 2:30 மணியளவில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ராஜுவிடம் 20 ஆயிரம் ரூபாயை உத்திரகுமார் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜுவை கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி இருவர் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி திட்டைரோடு, குளங்கரை பகுதியில் நேற்று காலை, சாலையின் குறுக்கே சென்ற மின்சார ஒயர், லாரியில் சிக்கி அறுந்து சாலையின் ஓரத்தில் கிடந்துள்ளது.அப்போது, சீர்காழிக்கு சைக்கிளில் வந்து டீ குடித்து, ஊர் திரும்பிய தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல், 65, அறுந்து கிடந்த ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி, உயிருக்கு போராடியுள்ளார். அதைப் பார்த்த அரவிந்தன், 25 என்பவர் சிங்காரவேலுவை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவரையும் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X