சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபர் சொத்து அபகரிப்பு பிரச்னை : உதவி கமிஷனரின் வீட்டில் சோதனை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை:தொழில் அதிபரின் குடும்பத்தினரை, பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து, சொத்தை அபகரித்த வழக்கில் சிக்கியுள்ள, போலீஸ் உதவி கமிஷனர் சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை செய்தனர்.சென்னை, அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ்; தொழில் அதிபர். இவருக்கும், தேனாம்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷுக்கும், 7.50 கோடி ரூபாய் அளவுக்கு கொடுக்கல்

சென்னை:தொழில் அதிபரின் குடும்பத்தினரை, பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து, சொத்தை அபகரித்த வழக்கில் சிக்கியுள்ள, போலீஸ் உதவி கமிஷனர் சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை செய்தனர்.

சென்னை, அயப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ்; தொழில் அதிபர். இவருக்கும், தேனாம்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷுக்கும், 7.50 கோடி ரூபாய் அளவுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது.பண பிரச்னை தீர்ந்த நிலையில், கடன் தொகை 2 கோடி ரூபாய்க்கு, தான் நடத்தி வந்த, 'செக்யூரிட்டி' நிறுவனத்தை வெங்கடேஷிடம், ராஜேஷ் விற்றார். எனினும் அவர் மீது, சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த சிவகுமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார், விசாரணை என்ற பெயரில் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர். கோவையில், வருங்கால மனைவி, மைத்துனருடன் ராஜேஷ் தங்கி இருந்தார். மூவரையும் சென்னைக்கு கடத்தி வந்து, செங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்தனர். அவரது சொத்தை அபகரித்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் தருண், கிருஷ்ண பிரசாத் ஆகியோரின் பெயருக்கு எழுதிக் கொடுத்து உள்ளனர்.

இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பெருந்தொகைக்கு ஆசைபட்டு, ஆந்திர தொழில் அதிபர்கள் சீனிவாச ராவ். தருண், கிருஷ்ண பிரசாத் ஆகியோருக்கு ஆதரவாக, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்டோர் செயல்பட்டது தெரியவந்தது.

இவர்களின் செயலுக்கு, ஹிந்து அமைப்பைச் சேர்ந்த கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், 48, என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., - ஸ்ரீகண்டன் உள்ளிட்ட 10 பேர் மீது, கடத்தல், கொலை மிரட்டல் உட்பட, ஆறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் ஸ்ரீகண்டன் மட்டும் கைது செய்யப்பட்டார்; மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, சென்னை முகலிவாக்கத்தில் உள்ள, உதவி கமிஷனர் சிவகுமாரின் வீட்டிற்கு, நேற்று காலை டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான போலீசார் சென்றனர். வீட்டின் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின், கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுடன், சிவக்குமாரின் வீட்டை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X