தமிழ்நாடு

ஆன்மிக தொலைக்காட்சி அறநிலைய துறை துவக்குமா?

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
'ஹிந்து சமயத்தை வளர்க்க, அறநிலையத் துறை சார்பில் ஆன்மிக தொலைக்காட்சி துவக்கும் திட்டத்தை, சட்டசபையில் அறிவித்து செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக ஹிந்து சமயத்தை அறநிலையத் துறை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட தீய
ஆன்மிக தொலைக்காட்சி அறநிலைய துறை துவக்குமா?

'ஹிந்து சமயத்தை வளர்க்க, அறநிலையத் துறை சார்பில் ஆன்மிக தொலைக்காட்சி துவக்கும் திட்டத்தை, சட்டசபையில் அறிவித்து செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக ஹிந்து சமயத்தை அறநிலையத் துறை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட தீய செயல்கள் அரங்கேற, பக்தி கூட வியாபாரம் ஆகிவிட்டது தான் காரணம். இதை களைய, ஹிந்து சமய வளர்ச்சிக்கு, அரசு தனி கவனம் செலுத்துவது மிக முக்கியம்.தற்போதைய திரைப்படங்களின் போக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சிகளில் ஆபாச, சட்ட விரோதமான, ஹிந்து கலாசாரத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இது, இளம் தலைமுறையினரின் மன நிலையில் தவறான, குரூரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதை தடுத்து, சரியான பாதைக்கு திருப்பி விட வேண்டும்.திருப்பதி, திருமலை தேவஸ்தானம், தனி தொலைக்காட்சி நடத்தி வருகிறது; பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, பக்தி மார்க்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்க்கிறது.

கடந்த ஆண்டு சட்டசபையில், 'அறநிலையத் துறை சார்பில், 8.77 கோடி ரூபாய் மதிப்பில் தொலைக்காட்சி துவக்கப்படும்' என அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத் துறை புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சூட்டோடு, அறநிலையத் துறை ஆன்மிக தொலைக்காட்சி துவக்கும் திட்டத்தை, சட்டசபையில்
அறிவித்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
26-ஆக-202115:38:54 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஆன்மீக பூமியான இதிகாச நம் மாநிலத்தை கடவுள் மீது குறிப்பாக இந்து கடவுலகளை தப்பாக பேசுவது சித்தரிப்பது எல்லாம் இந்த திராவிட கூட்டங்கள் வந்த பின்புதான் ..இப்போது அது மீண்டும் நாம் உயிர் கொடுத்துவிட்டோம் ..இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளவர்களிடம் நாம் மாட்டி கொண்டுள்ளோம் திரைத்துறையில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக தான் இப்போது செயல் பட்டுக்கொண்டிருக்கிறது ...டி வீ க்கள் மூலம் கலாசார சீரழிவை நம் வீட்டுக்குள் கடந்த இருபது ஐந்து வருடம் முன் கொண்டு வந்ததே இப்போதுள்ள ஆட்சியியலாரின் குடும்பம்தான் ..
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
26-ஆக-202114:39:59 IST Report Abuse
S.kausalya இந்து கோவில்களில் உள்ள உண்டியல்களில் சேரும் பணத்தை எடுத்து தான் சேனல் ஆரம்பிப்பார்கள். முதலில் இந்து சமய போதனை தான் இருக்கும் இது மதசார்பற்ற நாடு எனவே எல்லா மதத்தையும் இந்த சேனலில்கொண்டு வர வேண்டும் என்று இங்கு இருக்கும் புன்னாக்குகள் கத்தும். இந்து மதத்தை சிறிது சிறிதாக புறந்தள்ளி அவர்க ளை முன்னிறுத்தி ஆசனம் கொடுத்து அவர்களுக்கு விளம்பரம் செய்வார் கள். பின் இந்து மதத்தின் பெருமையை சொல்ல ஆரம்பிக்கப்பட்ட சேனல், பிற மதத்திற்கு அடையாளமாக போய் விடும். அவர்களும் வெளி நாட்டு பணம் கொட்டி இருப்பதால், விளம்பரம் தந்து சேனலை கைபற்றி விடுவார்கள். எனவே அரசு ஒரு ஆணியையும் பிடுங்க வேண்டாம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
26-ஆக-202110:17:09 IST Report Abuse
தமிழ்வேள் அண்ணாதுரை ராமசாமி கட்டுமரம் ஆகோயோரது காதுக்கூசும் உபன்யாசங்கள் ஒளிபரப்பாகும் . பார்க்க / கேட்க சகிக்காது ...இதெல்லாம் தேவையா ? அறநிலையத்துறை அறமற்ற துறையாகி எத்தனையோ வருடங்கள் கடந்துவிட்டன ...கட்டுமரத்தின் உபயம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X