அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.516 கோடி முறைகேடு: சட்டசபையில் மந்திரி 'பகீர்'

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை, ஆக. 26-''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்றுள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார். கடந்த ஆட்சியில், பயிர்கடன் வழங்கியதில், 51௬ கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற, 'பகீர்' தகவலையும் வெளியிட்டார்.சட்டசபையில், அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:
 ரூ.516 கோடி முறைகேடு: சட்டசபையில் மந்திரி 'பகீர்'

சென்னை, ஆக. 26-''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்றுள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார்.

கடந்த ஆட்சியில், பயிர்கடன் வழங்கியதில், 51௬ கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற, 'பகீர்' தகவலையும் வெளியிட்டார்.


சட்டசபையில், அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:



நாட்டில் உள்ள, 10 கார்ப்பரேட் உர தயாரிப்பு நிறுவனங்கள், செயற்கையாக உர தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயல்கின்றன. அரசு மேற்கொண்ட முயற்சியால், குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.டெல்டா மாவட்டங்களில் உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. உர தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டால், நீரில் கலந்து பயன்படுத்தும் நானோ யூரியா தருவதாக கூறுகின்றன. எனவே, ரசாயன உர தொழிற்சாலைகளை நம்பி இருப்பதற்கு பதிலாக, இயற்கை வேளாண்மை முறையை கொண்டு வர வேண்டும். மண்புழு உரங்கள், இயற்கை உரங்களை தயாரிக்க வேண்டும்.


சுய உதவி குழு

கடந்த 1989ல், அப்போதைய முதல்வரால் துவக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் படுத்து விட்டன. கூட்டுறவு வாயிலாக, 5 சதவீத கடன் மட்டுமே கொடுக்கப்படுகிறது; மற்றவை தேசிய, வணிக வங்கிகளால் வழங்கப்படுகின்றன.விவசாயிகளுக்கு வழங்கும் பயிர் கடன் போல, சுயஉதவி குழுக்களுக்கான கடன் வட்டியை குறைத்து வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் பயிர் கடன்கள் மட்டுமின்றி, சுயஉதவி குழுக்களின் கடன்களும் உயர்த்தி வழங்கப்படும்.


பயிர் கடன் ரத்து

பயிர் கடன் ரத்து செய்யப்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கி விட்டோம். மீதமுள்ள, 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ரசீது வழங்க வேண்டும். அடங்கலில் குறிப்பிட்ட சாகுபடி பரப்பரளவை விட, கூடுதலாக பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது. சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் இவ்வாறு, 503 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பட்டியலை, எதிர்கட்சி தலைவருக்கு தர தயாராக இருக்கிறோம்.

கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி, கூட்டுறவு துறை அமைச்சர் எல்லாம், திட்டம் போட்டு செய்த காரியமாக எனக்கு தெரிகிறது. ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. இதில், எதுவுமே பதிவு செய்வது கிடையாது. வசூலான பணத்தை வங்கியிலும் டிபாசிட் செய்யவில்லை. தரிசு நிலத்திற்கு பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜன., 31க்கு முன் பெற்ற பயிர்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என, காலவரையறை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், முன்தேதியிட்டு பயிர்கடன் பெற்றதாக, பிப்ரவரி மாதத்தில் பெற்ற பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


நகை கடன் தள்ளுபடி

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என, கூறப்பட்டது. அதனால், ஒரே நபர் பல இடங்களில் கடன் வாங்கியது, அதிகம் நடந்துள்ளது. இவ்வாறு, 13 லட்சத்து, 91 ஆயிரத்து, 656 பேர், பல இடங்களில் நகை கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு, 5,796 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதற்கு விரைவில் முதல்வர் முடிவெடுப்பார்.இவ்வாறு அமைச்சர் பெரியசாமி கூறினார்.


அலறிய 'மாஜி'க்கள்!


கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அமைச்சர்களின் பதிலுரையின் போது, முன்னாள் அமைச்சர்கள் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு நிலவியது.

உணவுத் துறை மற்றும் கூட்டுறவு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி பதிலுரை வழங்கினர். கூட்டுறவு அமைச்சர் பேசும்போது, அ.தி.மு.க., ஆட்சியில், பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டினார்; இது தொடர்பான புள்ளிவிபரங்களையும் வெளியிட்டார்.

''முன்னாள் அமைச்சர் ராஜு வசிக்கும் கோச்சடை என்ற பகுதியில் உள்ள நிலத்தை காட்டி, பயிர் கடன் பெறப்பட்டுள்ளது. ஒரே நபர், பல கோடி ரூபாய் பயிர் கடன் பெற்று, கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு விட்டுள்ளார். ஆனால், குறைந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை,'' என, அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, கூட்டுறவு துறை முன்னாள் அமைச்சர் ராஜு பேச, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார். ''முறைகேடாக பயிர் கடன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.''ஆனால், நான் மதுரை, செல்லுாரில் வசிக்கிறேன். கோச்சடையில் வசிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதனால், நான் சொல்லி பயிர் கடன் பெற்றதாக, மக்கள் தவறாக நினைத்து விடுவர்,'' என்றார்.

இதேபோல உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியும், முந்தைய ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விளக்கினார். முறைகேட்டிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு, முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அவ்வப்போது எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X