பொது செய்தி

தமிழ்நாடு

நெல் நாற்றாங்கால் விட்டு நடவு பணி துவக்கம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
உடுமலை : அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கல்லாபுரம் பகுதியில், நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது; வேளாண்துறை வாயிலாக, தொழில்நுட்ப உதவி வழங்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை அருகே கல்லாபுரம் சுற்றுப்பகுதியில், மூன்று போகத்தில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சீசன்தோறும், 1,200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், அமராவதி அணை நீர் இருப்பை பொறுத்து,

உடுமலை : அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கல்லாபுரம் பகுதியில், நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது; வேளாண்துறை வாயிலாக, தொழில்நுட்ப உதவி வழங்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

உடுமலை அருகே கல்லாபுரம் சுற்றுப்பகுதியில், மூன்று போகத்தில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சீசன்தோறும், 1,200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், அமராவதி அணை நீர் இருப்பை பொறுத்து, இச்சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.நடப்பாண்டு, பருவமழையால், அமராவதி அணை நிரம்பி, பாசனத்துக்கு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்கள் வழியாக குறித்த நேரத்தில், தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், முன்னதாகவே, நாற்றாங்கால் அமைத்து, விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். தற்போது நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது.நெல் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கும் கல்லாபுரம் பகுதியில், விவசாயிகளின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.குறிப்பாக, நெல்லை காய வைக்க உலர் களம், இருப்பு வைக்க ஊரக கிடங்கு முக்கிய தேவையாக உள்ளது. மேலும், அறுவடை தருணத்தில், தற்காலிக அரசு கொள்முதல் மையமும் அமைக்கப்படுவதில்லை.தற்போது நடவு பணிகள் நடைபெறும், நிலையில், திருந்திய நெல் சாகுபடிக்கான, விழிப்புணர்வு, மானியமும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.பல்வேறு காரணங்களால், நடவு கூலி அதிகரித்துள்ளது;

தொழிலாளர்களும் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே, இயந்திர நடவுக்கான வழிகாட்டுதல்களை அடுத்த சீசனிலாவது வேளாண்துறை வழங்க எதிர்பார்த்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு, அமராவதி அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், நெல் சாகுபடிக்கு உதவியாக இருக்கும். ஆனால், நீண்ட காலமாக பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. நடவு, நீர் நிர்வாகம், நோய்த்தடுப்பு பணிகளில், வேளாண்துறை உதவினால், விளைச்சலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X