சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரர்களிடம் லஞ்சம்? தனிப்படை எஸ்.ஐ., மாற்றம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணம் மோசடி நிதி நிறுவன வழக்கில், லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மேலும் ஒரு தனிப்படை எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வசித்த கணேஷ், 50; சுவாமிநாதன், 47, சகோதரர்கள், நிதி நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைதாகி உள்ளனர்.மோசடி புகாரில் இருந்து தப்பிக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும்,

தஞ்சாவூர்:கும்பகோணம் மோசடி நிதி நிறுவன வழக்கில், லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மேலும் ஒரு தனிப்படை எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வசித்த கணேஷ், 50; சுவாமிநாதன், 47, சகோதரர்கள், நிதி நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைதாகி உள்ளனர்.மோசடி புகாரில் இருந்து தப்பிக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், அப்போதைய தஞ்சை எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., விசாரணை நடத்தினார். இதையடுத்து, தேஷ்முக் சேகர் சஞ்சய், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டார்.

மோசடி சகோதரர்களிடம் பணம் பெறுவதற்கு பேரம் பேசியதாக, எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சோமசுந்தரம், நாகப்பட்டனம் மாவட்டம், கீவளுர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.உடந்தையாக செயல்பட்ட, தனிப்படை எஸ்.ஐ., கண்ணன், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X