சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொண்டியில் பயங்கரவாதிகள் ஊடுருவலா

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தொண்டி:பயங்கரவாதிகள் தொண்டி பகுதிக்குள் ஊடுருவியதாக கிடைத்த தகவலால் எஸ்.பி. தலைமையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இலங்கையில் இருந்து 11 பேர் அதாவது 8 பேர் வேதாரண்யம் பகுதியிலும் 3 பேர், தொண்டியிலும் கடல் வழியாக ஊடுருவியதாக உளவு பிரிவிலிருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் தலைமையில் தனிப்படையினர் ராமநாதபுரம்

தொண்டி:பயங்கரவாதிகள் தொண்டி பகுதிக்குள் ஊடுருவியதாக கிடைத்த தகவலால் எஸ்.பி. தலைமையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இருந்து 11 பேர் அதாவது 8 பேர் வேதாரண்யம் பகுதியிலும் 3 பேர், தொண்டியிலும் கடல் வழியாக ஊடுருவியதாக உளவு பிரிவிலிருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் தலைமையில் தனிப்படையினர் ராமநாதபுரம் கியூபிரிவு, தேவிபட்டினம் மரைன் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரையோர மீனவ கிராமங்களில் விசாரித்தனர்.போலீசார் கூறுகையில் ''பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டோம். வேதாரண்யம் பகுதியில் யாரும் சிக்கியுள்ளனரா என விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X