சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிக்டாக்' பெண் பிரபலத்தின் தற்கொலை நாடகம் அம்பலம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருச்சி:தற்கொலை செய்து கொள்வதாக, 'டிக்டாக்' பெண் பிரபலம், மதுரை போலீஸ் கமிஷனருக்கு வீடியோ அனுப்பியது, பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசிப்பவர் சூர்யா தேவி, 35. கணவரை பிரிந்து, மகள், மகனுடன் வசித்து வருகிறார். டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்.சமீபத்தில், தன் ஆண் நண்பர் சிக்கந்தர் என்பவரை செருப்பால் அடித்து, சமூக வலைதளங்களில்

திருச்சி:தற்கொலை செய்து கொள்வதாக, 'டிக்டாக்' பெண் பிரபலம், மதுரை போலீஸ் கமிஷனருக்கு வீடியோ அனுப்பியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசிப்பவர் சூர்யா தேவி, 35. கணவரை பிரிந்து, மகள், மகனுடன் வசித்து வருகிறார். டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்.சமீபத்தில், தன் ஆண் நண்பர் சிக்கந்தர் என்பவரை செருப்பால் அடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்த புகாரில், மதுரை போலீசார், சூர்யாதேவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு வீடியோ ஒன்றை சூர்யா தேவி அனுப்பினார். அதில், மிகுந்த மன உளைச்சல் காரணமான தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அழுது கொண்டே கூறி இருந்தார்.போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இரவு 12:00 மணிக்கு மேல் சூர்யாதேவி வீட்டுக்கு சென்றபோது, உள்பக்கம் தாழிட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்காததால், தீயணைப்பு படையினர் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு, கட்டிலில் சூர்யாதேவி படுத்து இருந்துள்ளார். சீலிங் பேனில் வேட்டி ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது. வீடியோ அனுப்பியது குறித்து விசாரித்தபோது, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சூர்யாதேவி கூறி உள்ளார்.

அவருக்கு அறிவுரை கூறி, சூர்யாதேவி, அவரது மகன், மகள் ஆகியோரை, அருகில் உள்ள அவரது தந்தை சாமி வீட்டில் ஒப்படைத்து, போலீசார் சென்றனர். நண்பரை செருப்பால் அடித்த வழக்கில் இருந்து தப்பிக்கவே, சூர்யாதேவி தற்கொலை நாடகம் ஆடியதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X