கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தகவல் சட்டத்தில் கூட்டுறவு சங்கம் மாநில கமிஷன் உத்தரவுக்கு தடை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மதுரை:கூட்டுறவு சங்கத்தில், தகவல் சட்டத்தில் விபரம் கோரியதற்கு எதிரான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கேதையிரும்பு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர் ஆனந்தன் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கியது உட்பட பல விபரங்களை, சிலர் தகவல் உரிமைச் சட்டத்தில் கோரினர்.

மதுரை:கூட்டுறவு சங்கத்தில், தகவல் சட்டத்தில் விபரம் கோரியதற்கு எதிரான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கேதையிரும்பு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலர் ஆனந்தன் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கியது உட்பட பல விபரங்களை, சிலர் தகவல் உரிமைச் சட்டத்தில் கோரினர். இச்ச ட்டத்தில், கூட்டுறவு சங்கத்தில் தகவல் கோரி கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தோம்.

இதை எதிர்த்து, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். விளக்கமளிக்க மாநில தகவல் கமிஷனர் எனக்கு உத்தரவிட்டார். கூட்டுறவு சங்கமானது பொது நிறுவனம் அல்ல. அதை, உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நிர்வகிக்கின்றனர். தகவல் உரிமை சட்டத்தில் கூட்டுறவு சங்கம் வராது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில தகவல் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அவரது உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். சங்கத்திற்கு எதிராக மேல்நடவடிக்கை எடுப்பதை கைவிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ''மாநில தகவல் கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ''அவருக்கும், திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். செப்., 15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X