கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி உதவியாளர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஓமலுார்:முன்னாள் முதல்வர் பழனிசாமி உதவியாளர் மீது, அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, வேறு ஒரு புகார் எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, நடுப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் பழனிதேவன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:நடுப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக

ஓமலுார்:முன்னாள் முதல்வர் பழனிசாமி உதவியாளர் மீது, அரசு வேலை வாங்கி தருவதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, வேறு ஒரு புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, நடுப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் பழனிதேவன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:நடுப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக மாரப்பன் உள்ளார். இவரது மகன் மணி; முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக இருந்தார்.

மணியால் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, மாரப்பன் கட்டுப்பாட்டில் சங்கம் செயல்படுகிறது. அவர் உத்தரவுக்கு அடிபணிவோருக்கு, முறையற்ற வகையில், சங்கத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் சங்கத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, போனஸ் தொகை வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர்.

முறைகேடு குறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகளிடம், மணி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விசாரணையை முடித்துக் கொண்டார். மேற்கண்ட சங்க நிர்வாக குழுவை கலைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.37 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, மணி மீது ஏற்கனவே சேலம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X