பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் தடுப்பூசி ஒதுக்க ஊராட்சிகள் கோரிக்கை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சூலுார் : ஊராட்சி பகுதிகளுக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், 10 ஊராட்சிகளில், தலா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், ஐந்து ஊராட்சிகளில், தலா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் வசிக்கின்றனர். இரு ஊராட்சிகளில், 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.ஒவ்வொரு ஊராட்சியிலும்

சூலுார் : ஊராட்சி பகுதிகளுக்கு அதிக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், 10 ஊராட்சிகளில், தலா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், ஐந்து ஊராட்சிகளில், தலா 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் வசிக்கின்றனர். இரு ஊராட்சிகளில், 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுவரை, இரு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ஒவ்வொரு ஊராட்சியிலும், 500 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மாதப்பூர் உள்ளிட்ட சில ஊராட்சிகளில், 400 தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டுள்ளன. குறைவான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு வருவதால், கிராம மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து கிராமப்பகுதி மக்கள் கூறியதாவது:ஊராட்சி பகுதிகளில், 10 சதவீதத்துக்கு குறைவானவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கின்றனர்.

சுகாதாரத்துறையினர், பேரூராட்சி பகுதிகளில் மட்டும், தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம்களை நடத்துகின்றனர்.ஊராட்சி பகுதிகளுக்கு, போதிய தடுப்பூசி ஒதுக்குவதில்லை. இதனால், கிராமத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கிராமங்களுக்கு அதிக தடுப்பூசி ஒதுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X