பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக பஸ்கள் முழுமையாக இயக்கம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் வழியாக கர்நாடகாவுக்கு, கர்நாடக அரசு பஸ்கள் நேற்று முதல், முழு எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.தமிழகத்தில், கடந்த ஏப்ரல் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 23ம் தேதி முதல், கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. எனினும், கோவையிலிருந்து, அன்னுார் வழியாக கர்நாடகாவுக்கு, 23ம் தேதி பஸ்கள்

அன்னுார் : அன்னுார் வழியாக கர்நாடகாவுக்கு, கர்நாடக அரசு பஸ்கள் நேற்று முதல், முழு எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

தமிழகத்தில், கடந்த ஏப்ரல் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 23ம் தேதி முதல், கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. எனினும், கோவையிலிருந்து, அன்னுார் வழியாக கர்நாடகாவுக்கு, 23ம் தேதி பஸ்கள் இயக்கப்படவில்லை.அன்னுார் பகுதி மக்கள், சத்தி சென்று அங்கிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட குறிப்பிட்ட பஸ்களில் பயணித்தனர்.

நேற்று முன்தினம் ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று வழக்கம் போல், கோவையிலிருந்து, அன்னுார், சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடகாவுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என, இயக்கப்பட்டன. 120 நாட்களுக்கு பிறகு கர்நாடகா--தமிழகம் இடையே இரு மாநில அரசு பஸ்களும் இயக்கப்பட்டதால், அன்னுார் வட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X