பொது செய்தி

தமிழ்நாடு

பல ஆயிரம் கோடி இழப்பில் போக்குவரத்து கழகங்கள் அ.தி.மு.க., அரசு மீது எம்.பி. ராஜா புகார்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அன்னுார் : 'அ.தி.மு க., அரசின் நிர்வாக சீர்கேட்டால், போக்குவரத்து கழகங்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, நீலகிரி எம்.பி., ராஜா கணேசபுரத்தில் பேசினார்.பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழா மற்றும் தி.மு.க., அரசின் நுாறு நாள் சாதனை விழா, கணேசபுரத்தில் நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.இதில், நீலகிரி எம்.பி.,

அன்னுார் : 'அ.தி.மு க., அரசின் நிர்வாக சீர்கேட்டால், போக்குவரத்து கழகங்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, நீலகிரி எம்.பி., ராஜா கணேசபுரத்தில் பேசினார்.

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழா மற்றும் தி.மு.க., அரசின் நுாறு நாள் சாதனை விழா, கணேசபுரத்தில் நேற்று நடந்தது. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.இதில், நீலகிரி எம்.பி., ராஜா பேசியதாவது:அ.தி.மு.க., அரசின் முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேட்டால் அரசு போக்குவரத்து கழகங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அனைத்து நகர பேருந்துகளிலும், பெண்களுக்கு இலவச பயணம் என, அறிவித்துள்ளோம்.எம்.பி.,க்களுக்கான, 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு ஒதுக்கவில்லை.

இதனால், தொகுதியில் அடிப்படை பணிகளை எம்.பி.,கள் செய்ய முடியாத நிலை உள்ளது.அதிமுக அரசு, கொரோனா சிகிச்சை என்ற பெயரில், பொய் கணக்கு எழுதி பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது.கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார். த.மா.கா., கோவை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம், தே.மு.தி.க., ஒன்றிய தலைவர் முத்துராமன், ம.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ராணி செந்தில் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 200 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.குவிந்த மனுக்கள்எம்.பி., ராஜா, ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்னுார் வந்ததால், ஏராளமானோர், முண்டியடித்து மனு கொடுத்தனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X