வேல்முருகனுக்கு பிடிவாரன்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வேல்முருகனுக்கு 'பிடிவாரன்ட்'

Added : ஆக 26, 2021
Share
உளுந்துார்பேட்டை:'டோல்கேட்'டை உடைத்து சேதப்படுத்திய வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட ஒன்பது பேருக்கு, 'பிடிவாரன்ட்'பிறப்பிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கும் மையத்தை, 2018 ஏப்., 1ல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 14 பேர் அடித்து சேதப்படுத்தினர். இந்த வழக்கு,

உளுந்துார்பேட்டை:'டோல்கேட்'டை உடைத்து சேதப்படுத்திய வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட ஒன்பது பேருக்கு, 'பிடிவாரன்ட்'பிறப்பிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கும் மையத்தை, 2018 ஏப்., 1ல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 14 பேர் அடித்து சேதப்படுத்தினர். இந்த வழக்கு, உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய வழக்கு விசாரணைக்கு, ஐந்து பேர் ஆஜராகினர்.

வேல்முருகன் உட்பட ஒன்பது பேர் ஆஜராகவில்லை. வேல்முருகன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை செப்., 1க்கு தள்ளிவைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X