விவேக் மரணம்: ஆணையம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவேக் மரணம்: ஆணையம் விசாரணை

Added : ஆக 26, 2021
Share
விழுப்புரம்:நடிகர் விவேக் மரணம் தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரின் மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.நகைச்சுவை நடிகர் விவேக், ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் இறந்தார். அவர் இறப்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி செலுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பெரும் சர்ச்சையை

விழுப்புரம்:நடிகர் விவேக் மரணம் தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரின் மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

நகைச்சுவை நடிகர் விவேக், ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் இறந்தார். அவர் இறப்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி செலுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதே விவேக் மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத் துறையினர், 'தடுப்பூசிக்கும், விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை' என, தெரிவித்தனர்.இந்நிலையில், விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், 45 என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் அனுப்பினார்.

அதில், 'கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தான், நடிகர் விவேக் மரணம் அடைந்து உள்ளார். 'இது தொடர்பாக, முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன், அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.சரவணனின் புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X