பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் பழுதால் தண்ணீர் தட்டுப்பாடு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம், : போர்வெல் இருந்தும் மின்மோட்டார் பழுதால், காரமடை குறிஞ்சி நகர் மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு குறிஞ்சி நகரில், 150 வீடுகள் உள்ளன. இங்கு வாரம் ஒருமுறை நல்ல தண்ணீர் வருகிறது.குடியிருப்பு வளாகத்தில் உள்ள போர்வெல்லில் இருந்து, தண்ணீர் பம்பிங் செய்து தினமும் வினியோகிக்கப்பட்டது.இந்நிலையில்,

மேட்டுப்பாளையம், : போர்வெல் இருந்தும் மின்மோட்டார் பழுதால், காரமடை குறிஞ்சி நகர் மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு குறிஞ்சி நகரில், 150 வீடுகள் உள்ளன. இங்கு வாரம் ஒருமுறை நல்ல தண்ணீர் வருகிறது.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள போர்வெல்லில் இருந்து, தண்ணீர் பம்பிங் செய்து தினமும் வினியோகிக்கப்பட்டது.இந்நிலையில், போர்வெல் மோட்டார் பழுதடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக, சீர் செய்யப்படாததால், தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.'போர்வெல் மோட்டாரை சீர் செய்யும்படி, காரமடை பேரூராட்சி செயல் அலுவலரிடம், மனு அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லாததால், போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்', என பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X